அவுஸ்திரேலியாவிலும் உணவு பற்றாக்குறை! - இலங்கையின் ஆளும் கட்சி உறுப்பினர் கவலை
பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன இலங்கையை மாத்திரம் பாதிக்கவில்லையெனவும், இது ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ள பிரச்சினை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். உலகில் வளர்ந்த நாடுகள் கூட தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக அவர் கூறுகிறார்.
உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக பொருளாதார மன்றமும் கூறியுள்ளதாக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய மக்களில் பெரும்பான்மையான மக்களுக்கு தற்போது உணவு தேவைப்படுவதாகவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்பது உண்மையாக இருந்தாலும் அது இலங்கையை மாத்திரமல்ல முழு உலகையும் பாதிக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




