1400 வீதத்தினால் அதிகரித்துள்ள காசாவின் உணவு விலைகள்
காசாவில் உள்ள குடும்பங்களுக்கான அனைத்து உணவுப் பங்கீடுகளும் தீர்ந்து விட்டதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
எனினும் இன்று காசா பகுதியில் உள்ள உணவு சமையலறைகளுக்கு, தம்மிடம் மீதமிருந்த உணவுப் பொருட்களை உலக உணவுத்திட்டம் வழங்கியுள்ளது.
காசாவில் உள்ள மக்கள்
பல வாரங்களாக, காசாவில் உள்ள மக்களுக்கு உணவு உதவிக்கான ஒரே நிலையான உதவியான சூடான உணவு சமையலறைகள் செயற்பட்டு வந்தன.
தினசரி உணவுத் தேவைகளில் 25 சதவீதத்தினரின் உணவுத்தேவையை மட்டுமே இது பூர்த்தி செய்து வந்தது காசாவில் மலிவு விலையில் ரொட்டிகளை விநியோகிக்க உலக உணவுத்திட்டம், வெதுப்பகங்களுக்கும் பொருட்களை விநியோகித்து வந்தது.
எனினும், 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் கோதுமை மாவு மற்றும் சமையல் எரிபொருள் தீர்ந்து போனதால், உலக உணவுத்திட்டத்தின் உதவியை பெற்று வந்த 25 வெதுப்பகங்களும் மூடப்பட்டன. அத்துடன், இரண்டு வார உணவுப் பொருட்களுடன் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் தீர்ந்துவிட்டன.
இந்தநிலையில், சுத்தமான தண்ணீர் மற்றும் சமையலுக்கு எரிபொருளின் கடுமையான பற்றாக்குறை குறித்து உலக உணவுத்திட்டம், தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது எல்லைகளை கடக்கும் அனைத்து இடங்களும் மூடப்பட்டிருப்பதால், ஏழு வாரங்களுக்கும் மேலாக எந்த மனிதாபிமான அல்லது வணிகப் பொருட்களும் காசாவுக்கு கொண்டு வரப்படவில்லை.
உலக உணவுத்திட்டம்
காசா பகுதி இதுவரை சந்தித்ததிலேயே மிக நீண்ட முடக்கல் இது இதுவாகும் என்று உலக உணவுத்திட்டம் குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தக் காலத்துடன் ஒப்பிடும்போது உணவு விலைகள் 1,400 சதவீதம் வரை உயர்ந்துள்ளன, மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளன, இது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கடுமையான ஊட்டச்சத்து பிரச்சினையை எழுப்புகிறது.
இதேவேளை, நான்கு மாதங்கள் வரை ஒரு மில்லியன் மக்களுக்கு உணவளிக்க போதுமான,116,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உணவு உதவி, வழித்தடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்புக்களால், இந்தப்பொருட்கள் காசாவுக்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளன.
எனினும் எப்போது எல்லைகள் திறக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
