நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த விலைக்குறைப்புக்கள்! விசேட நடவடிக்கைக்கு தயாராகும் தரப்பினர்
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த உணவகங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்குகின்றனவா என்பதை பரிசோதிப்பதற்காக இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
உணவுகளின் விலையை குறைக்க நடவடிக்கை
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கும் அனைத்து நுகர்வோருக்கும் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு முதல் சோற்றுப் பொதி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலையை 20 வீதத்தால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





முத்துவை அசிங்கமாக பேசிய சீதா, கோபத்தில் பளார் என அறைந்த மீனா.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri
