இலங்கையில் குறையும் உணவுப் பண்டங்களின் விலை
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 10 - 13 வீதத்தினால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தின்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்டப் பொருட்களின் விலைகள் குறைவதை நுகர்வோர் காண்பார்கள் என சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார தெரிவித்துள்ளார்.
இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால், சந்தையில் தின்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

தின்பண்டங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெய்யின் விலை கிலோவிற்கு சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் அதிக விலைக்கு தின்பண்டங்களை கொள்வனவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan