உணவு வகைகளின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
உணவு மற்றும் பானங்களின் விலை குறைக்கப்படுவது குறித்து நாளை (05.07.2023) அறிவிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விலை குறைப்பு
மேலும் கூறுகையில் "எரிவாயு விலை குறைப்புடன், உணவக உணவுகளின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய எரிவாயு விலையுடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை குறைக்கப்பட்டமை குறித்து நாளை (05.07.2023) அறிவிக்கப்படும்.
இதேவேளை உணவுப் பொருட்களின் விலையை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கு வர்த்தக அமைச்சர் தீர்மானித்துள்ளார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நாளை முதல் இந்த நாட்டில் குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகளை நிச்சயமாக அறிவிப்போம்."
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |