அம்பாறையில் உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்
அம்பாறை (Ampara) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சகல இடங்களிலும் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அதனைக் கையாளும் நிறுவனங்கள் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொத்துவில் பிர3தேசத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் சகல நிறுவனங்களும் அதனைக் கையாளும் நிறுவனங்களும் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அத்துடன் உணவுகளை தயாரிப்பவர்களும் அதனைக் கையாள்பவர்களும் மேற்குறித்த திகதிக்கு முன்னர் கட்டாயமாக மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
உரிய காலத்துக்குள் பதிவு செய்தல் மற்றும் மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam