இலங்கையில் உணவு பாதுகாப்பற்றோர் விகிதம் குறைந்தது
இலங்கையில் உணவு பாதுகாப்பற்றோர் விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைந்துள்ளதாக உலக உணவு திட்ட (WFP) பிரதிநிதி பிலிப் வார்ட் வெளிவிவகார, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்தார்.
உலக உணவு திட்டம்
நாட்டின் முன்னேற்றத்தை பாராட்டிய பிலிப் வார்டு, வறுமை குறைப்பு, உணவு பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு வலுப்படுத்துதல் போன்ற தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துழைத்து தொடர்ந்தும் உலக உணவு திட்டம் ஆதரவு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
அதேநேரம், நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நலனில் முன்னேற்றத்தை உருவாக்குவதில் இலங்கை அரசு உலக உணவு திட்டத்துடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது குறிப்பிட்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்



