நாடாளுமன்ற உணவகத்தில் உறுப்பினர்கள் சாப்பிடுவதில்லை! உயர்த்தப்பட்டுள்ள உணவு விலை - சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் நாடாளுமன்ற உணவகத்தில் தற்பொழுது சாப்பிடுவதில்லை என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் நாடாளுமன்ற உணவகத்தில் உணவை உட்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உயர்த்தப்பட்டுள்ள உணவு விலை
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பகல் உணவு 100 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை ஊடகவியலாளர்களின் பகல் உணவு 50 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நாடாளுமன்றின் உணவகத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளமை தொடர்பான செய்தியை பத்திரிகை வாயிலாகவே அறிந்து கொண்டேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வீட்டிலிருந்து உணவு கொண்டு வரும் உறுப்பினர்கள்
மேலும், அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டிலிருந்தே உணவு கொண்டு வரத் தொடங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.