தனக்கும் வீட்டு சாப்பாடு வேண்டுமாம்! சிறையில் தவிக்கும் சாமரவின் கோரிக்கை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) தனக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு (Colombo) சிறைச்சாலை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் வசதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோரிக்கை
அதன்படி, அவருக்கு ஒரு பாய், தலையணை, தட்டு மற்றும் கோப்பை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், கண்டி தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகள் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாகவே சாமர சம்பத்தும் தனக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியல்
மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சாமர சம்பத் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |