இலங்கையில் உணவு இழப்புக்கான மூல காரணங்களை கண்டறியும் முயற்சி
சர்வதேச விவசாய ஆராய்ச்சிக்கான அவுஸ்திரேலிய மையத்தின் (ACIRA) ஆதரவுடன், இலங்கையில் உணவு இழப்புக்கான மூல காரணங்களை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு தேசிய திட்டமிடல் துறையின் விவசாயத் துறை உதவிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய பங்காளிகளாக பேராதனை பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பன செயற்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.
இலக்குகளை அடைவதற்கான தடை
இலங்கையில் இந்த விடயம் தொடர்பான அறிவின்மையே, உணவுப் பாதுகாப்பு மற்றும் தேசிய இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்திட்டமானது, அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைமுறை மாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த விடயத்தை ACIRA நிகழ்ச்சித் திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
அதிகளவு இடைவெளி
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் நவீன உணவு முறைகளை நோக்கிய முன்னேற்றம் அடைந்து வரும் அதே வேளையில், விரும்பிய மாற்றத்திற்கும் தற்போதைய நடைமுறைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த திட்டத்தின் முக்கிய சாதனையானது, மேம்படுத்தப்பட்ட வணிக
நடைமுறைகள் மற்றும் உணவு இழப்பைக் குறைப்பதற்கான மேம்பட்ட வணிக உத்திகள்
மற்றும் வணிக ஏற்பாடுகளை தொடர்ந்து பின்பற்றுவதற்கு வழிவகுக்கும்
பரிந்துரைகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
