கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்! நாட்டு நிலைமையை மறைக்கும் வடகொரிய அரசு
வட கொரியாவில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டிருப்பதை அடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றன.
இதனால் தற்போது வட கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
பருவம் தவறி பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்குள்ள உணவுப் பயிர்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் குறித்து ஆலோசனை
மேலும், போதிய நிதி இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை கூட வட கொரியாவால் வாங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் உணவு இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் அங்கு கொத்து கொத்தாக உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உணவுப் பஞ்சத்தை சீர்செய்வது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அவரச ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் உணவு உற்பத்தியை பெருக்குவது குறித்தும், விவசாயத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விவசாயம் குறித்து வட கொரியாவில் ஆலோசனை நடைபெறுவது இதுவே முதன்முறை ஆகும்.
மேலும் வட கொரியாவில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனால் வட கொரியாவில் இணையதளம் கூட கிடையாது என்பதுடன் வடகொரியாவில் என்ன நடந்தாலும் அது வெளியுலகுக்கு தெரியவராத வகையில் அந்நாட்டு அரசாங்கம் செயற்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.




