10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு!
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கு பின்னர் கடந்த மாதம் கடைகளில் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
BRC-NielsenIQ Shop விலைக் குறியீட்டின் படி ஜனவரியில் 1.5 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் பெப்ரவரியில் 1.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் விளைச்சல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு விலைகள் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு அல்லாத பணவீக்கம் ஜனவரியில் 0.9 வீதத்தில் இருந்து பெப்ரவரியில் 1.3 வீதமாக உயர்ந்துள்ளது, இது 2011 செப்டெம்பருக்குப் பிறகு மிக உயர்ந்த விகிதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் அழுத்தம்
"தேசிய காப்பீடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே செலவழிக்கக்கூடிய வருமானம் வீழ்ச்சியடையும் குடும்பங்களுக்கு விலை உயர்வு விரும்பத்தகாத செய்தியாக இருக்கும்" என்று பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஒரு தசாப்தத்திற்கும் பின்னர் கடைகளில் விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன ஜனவரியில் பணவீக்கம் 5.5 வீதமாக உயர்ந்துள்ளது.
1992 மார்ச் மாதத்திற்கு பிறகு, பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்நிலையில், "சில்லறை விற்பனையாளர்கள் இந்த விலை உயர்வுகளைத் தணிக்கவும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஹெலன் டிக்கின்சன் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பணவீக்கத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) டிசம்பரில் 5.4 வீதமாக இருந்தது.
எனினும் ஆடை, வீடுகள் மற்றும் தளபாடங்கள் விலைகள் உயர்ந்ததால், பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.