மட்டக்களப்பில் நான்காவது நாளாகவும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்!
மட்டக்களப்பு - மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதி வேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று நடைபெற்று வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் , தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் உட்பட பெருமளவானோர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடினர்.
நான்கு கோரிக்கைகளைச் சர்வதேச சமூகத்திடம் முன்வைத்து முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நிறைவுபெறும் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும், சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கச் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இன்றைய தினம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
