கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
கொழும்பு - காலி முகத் திடலில் போராட்டம் நடத்தி வரும் நபர்களுக்கு யாரேனும் உணவு மற்றும் நீர் வழங்கினால் அது குறித்து மிகுந்த அவதானம் தேவை என போராட்டக்காரர்களில் இளைஞர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிகவும் அஹிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு தரப்பினர் முயற்சித்து வருவதாக போராட்ட களத்தில் இளைஞர் ஒருவர் தெளிவுபடுத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இப்போராட்டத்தில் யாரேனும் தாக்க வந்தால் பதிலுக்கு தாக்க வேண்டாம், யாரேனும் திட்டினால் பதிலுக்கு நீங்கள் திட்ட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Public Announcement by protesters to protestors??
— Mari (@EmDeeS11) April 12, 2022
“If anyone tries to cause any trouble, by even hitting you or shouting at you, DO NOT RETALIATE. If it worsens, inform the Police. Film everything. Do not drink water from unsealed bottles. Aragalayata Jaya Wewa✊?” #lka pic.twitter.com/UX11fmmzi8
போராட்டத்தில் யாரேனும் தாக்கவோ அல்லது திட்டவோ எவரேனும் முயற்சித்தால் அவை அனைத்தையும் காணொளியாக பதிவு செய்து கொள்ளுமாறும் பொலிஸாருக்கு அது குறித்து அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பாதுகாப்பான இடங்களில் மட்டும் பொதுமக்களை உணவு அருந்துமாறு இளைஞர் தெரிவித்துள்ளார்.



