மைத்திரியுடன் கூட்டணிக்கு தயாராகும் சஜித்! - பிரதமர் பதவியை குறிவைக்கும் பொன்சேகா?
"சரத் பொன்சேகாவை பிரதமராக்குவோம்" என்ற தலைப்பில் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கொண்ட திட்டம் என்று அறியப்படுவதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை தொடர்ந்து சரத் பொன்சேகா தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரங்களின்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள சஜித் பிரேமதாசவுடன் ஒரு ஒப்பந்தம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால், மைத்திரிபால சிறிசேனா பிரதமராக நியமிக்கப்படுவார். இந்த சந்தேகம் இப்போது ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமட்டத்திலிருந்து எழுப்பப்படுகிறது.
சஜித் பிரேமதாச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஒருவருக்கொருவர் பகிரங்கமாகப் பாராட்டுவதும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சஜித் பிரேமதாச அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒரே நபர் தான் என்பதை மக்களுக்கு உணர்த்தும் திட்டத்தை சரத் பொன்சேகா முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam