2009 சரணடைதல் விவகாரத்தில் பொன்சேகாவின் பதற்றம்! அம்பலமாகப்போகும் முக்கிய இரகசியம்
தென்னிலங்கையை பொறுத்தவரையில் பிரித்தானிய அரசினுடைய அறிவிப்பானது இராணுவதலைவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் முன்னாள் இராணுவ தலைவர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் யுத்தக்காலங்களில் முதன்மை இராணுவ அதிகாரியாக இருந்த சரத்பொன்சேகா இந்த விடயங்கள் தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அவரின் அறிக்கையை பொறுத்தவரை சிலரை காப்பாற்ற முயல்வதாக தெரிகின்றது.
2009 ஆம் ஆண்டு மே 18 , 19 தினங்களில் யுத்தகளமுனையில் சரணடைதல் இடம்பெற்றது.
இது தொடர்பான வழக்கில்,வெள்ளைக்கொடி விவகாரத்தில் சரணடைந்தவர்களை சுட்டுக்கொலை செய்யுமாறு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சொன்னதாக செவிவழியாக தகவல் கிடைத்தாக சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இலங்கையின் யுத்தக்ககுற்றத்தில் இந்தியாவிற்கு சம்பந்தம் உள்ளதா? வெள்ளைக்கொடி விடயத்தில் நடந்ததது என்ன?
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |