முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் பொன்சேகா மற்றும் மகிந்தானந்த வாக்குவாதம்
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.
அவையில் உரையாற்றிய சரத் பொன்சேகா, இங்கு நாவலப்பிட்டிய சிங்கம் ஒன்று இருக்கின்றது. அவர் சிங்கமல்ல.சிங்கத்தின் தோலை போர்த்திக்கொண்டவர். கடந்த மே மாதம் 9 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஆறு மணி நேரமாக தொண்டை வறண்டு போகும் வரை கத்தினாராம்.
எனினும் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லையாம் என்று கூறினார். மே 9 ஆம் திகதி ஏற்பட்ட நிலவரத்தை நிறுத்த ஏன் ஜனாதிபதி தொண்டை வறண்டு போகும் வரை கத்த வேண்டும்.
பாதுகாப்பு சபையை கூடியிருந்தால், 15 நிமிடத்தில் அனைவரும் அங்கு வந்திருப்பார்கள். பிரச்சினையை தீர்த்திருக்கலாம். இந்த குற்றச்சாட்டுக்கள் இராணுவ பிரதானிகளுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கை. எனக்கு தடையேற்படுத்த வேண்டாம். நீங்கள்(மகிந்தானந்த) இதற்கு முன்னரும் இப்படியான கதையை கூறினீர்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மகிந்தானந்த அளுத்கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே ஜனாதிபதிக்கு அறிக்கையை வழங்கியிருந்தாகவே நான் கூறினேன்.
அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அந்த அறிக்கையில் நீங்கள் கூறியவர்கள் தவறு செய்யவில்லை என்பது உறுதியாகும். நாடாளுமன்றம் முடிந்து நீங்கள் செல்லும் போது நாங்கள் கூறும் அந்த இராணுவ பிரதானிக்கும் உங்களுக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடல் பற்றியும் எங்களுக்கு தெரியும்.
அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறு நாங்கள் கூறுகிறோம் எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா, நீங்கள் கூறிய அறிக்கை இருக்குமாயின் சபையில் சமர்ப்பியுங்கள்.முன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு வருவது பற்றி பேசினார்களாம். நீங்கள்(மகிந்தானந்த) பிரதமராக பதவிக்கு வர முயற்சித்து வருகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
