மீண்டும் கூடிய தொழிலாளர் ஆலோசனைக்குழு - EPF சட்டத்தில் திருத்தம் செய்வதில் கவனம்
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு, கடந்த வியாழக்கிழமை நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் செயலாளர் அலுவலகத்தில் மீண்டும் கூடியது.
இதன்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிவது குறித்து விவாதம் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பான முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள்

EPF உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் கூடுதல் கட்டண பொறிமுறையை புதுப்பித்தல், வங்கிகள் மூலம் அல்லாமல் EPF இலிருந்து உறுப்பினர்களுக்கு நேரடி கடன்களை அறிமுகப்படுத்துதல், EPF சட்டத்தில் உள்ள விதிகளில் உள்ள பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் விவாதித்தல் போன்ற விடயங்களே பரிந்துரைக்கப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |