சீனாவிற்கு செல்ல விமானக் கட்டணம் 10 மடங்கு அதிகம்
சீனாவில் கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு முன்பு இருந்த கட்டணத்தைவிட தற்போது 10 மடங்கு வரை விமானப் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் ஊதிய உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, சர்வதேச பயணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாக விலை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
உலக அளவில் விமானப் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவைப் பொறுத்தவரை அங்கு பின்பற்றப்படும் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாகவும் விமானப் போக்குவரத்து கட்டணம் அதிகமாக உள்ளது.
விமானம் இயக்கப்படுதலின் எண்ணிக்கை குறைவு
கட்டுப்பாடுகளின் காரணமாக விமானம் இயக்கப்படுதலின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
சான்ப்ரான்ஸிஸ்கோ முதல் ஷாஷாங்கி வரையில் தென்கொரியாவில் ஒருமுறை நின்று செல்லும் விமானக் கட்டணம் 4,000 அமெரிக்க டொலராக உள்ளது.
சீனாவுக்கு வெளியே விமானக் கட்டணங்கள் குறைவாக உள்ளபோது, சீனாவில் விமானக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
10 மடங்கு அதிகரிப்பு
2019ஆம் ஆண்டு சான்ப்ரான்ஸிஸ்கோவிலிருந்து சீனாவுக்கு செல்லும் கட்டணத்தைவிட தற்போதுள்ள கட்டணம் 10 மடங்கு அதிகம்.
சிகாகோவிலிருந்து சீனா செல்லும் கட்டணம் முன்பைவிட 6 மடங்கு அதிகமாகவுள்ளது. சீனாவிலிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிறுவனங்கள் தங்களது பயணத்தை நிறுத்தியுள்ளன. கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக அது பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
