அமெரிக்காவை அச்சுறுத்தும் பறக்கும் தட்டுகள்
தனது நாட்டு வான் எல்லைக்குள் பறந்துச் சென்றுள்ள அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (பறக்கும் தட்டு) தொடர்பான விசாரணைகளை செயலணிக்குழுவின் ஊடாக மேற்கொள்ள அமெரிக்கா தீர்மானித்தள்ளது.
கடந்த ஜூன் மாதம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான பல காட்சிகள் வெளியாகி இருந்தன. இவற்றில் பலவற்றை தெளிவுப்படுத்த முடியாமல் போனது.
அத்துடன் இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு அதிகரித்தது. இந்த விடயம் சம்பந்தமாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
புதிய அணியனர் மற்றும் உயர் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பாக எதிர்காலத்தில் கண்காணிப்பர். வான் பரப்பு ஆக்கிரமிப்பு தொடர்பான எந்த தகவலிலும் அடையாளம் காணப்பட்ட மற்றும் அடையாளம் காணப்படாத நிலைமையானது மிகவும் பாரதூரமான சம்பவமாக கருதப்படும் என்பதுடன் அனைத்து சம்பவங்கள் பற்றியும் விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் கூறியுள்ளது.
அமெரிக்க இராணுவத்தினர், தமது நாட்டு வன் பரப்பை ஆக்கிரமிக்கும் வகையில் தென்படும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் சம்பந்தமான பல முறை அறிக்கையிட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்நாட்டு சட்ட வரைவாளர்கள் அது குறித்து அறிக்கை ஒன்றை கோரியிருந்தனர். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இப்படியான 144 சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்றை தவிர ஏனைய அனைத்து அறிக்கைகளும் தெளிவற்றவை.
இவ்வாறான சம்பவங்கள் எந்த வேற்று கிரக செயற்பாடுகளின் தெளிவான அறிகுறிகள் இல்லை என பென்டகன் கூறினாலும் அந்த பறக்கும் பொருட்கள் வேற்று கிரகங்களில் இருந்து வந்திருக்கலாம் என்பதை பென்டகன் நேரடியாக மறுக்கவில்லை.