இலங்கை விமானங்களை காலவரையின்றி நிறுத்தியது துபாய்
இலங்கையில் போராட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை இலங்கை விமானங்களை நிறுத்தியுள்ளதாக flydubai தெரிவித்துள்ளது.
துபாய் மற்றும் கொழும்பு விமான நிலையத்திற்கு (CMB) இடையிலான flydubai விமானங்கள் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலை
"இலங்கையின் நிலவரங்களையும் நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்போம்"எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பாரிய எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது, இதனால் விமான நிறுவனங்கள் மீண்டும் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மற்ற மையங்களில் எரிபொருள் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்
"இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், பயணிகளின் பயண அட்டவணையில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று flydubai செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் இந்திய இராணுவத்தின் வருகையை உச்சரித்தது யார்! இரகசிய நகர்வுகள் பல (Video) |