நடுவானில் விமானத்தில் நடந்த கத்திக்குத்து: ரத்தகாயங்களுடன் 180 பயணிகளை காப்பாற்றிய விமானி
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி நேற்றையதினம்(30) பயணித்த Flydubai விமானம், சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவசர சமிக்ஞையை வெளியிட்டு, திடீரென தனது பயணப் பாதையை மாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
எனவே இதற்கான காரணம் தொடர்பில் பல கேள்விகள் இருந்தநிலையில் தற்போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடுவானில் பதற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி நேற்று(30) காலை 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த ‘காக்பிட்’ அறையில் விமானி, துணை விமானி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகளில் ஒருவர் விமானத்தின் அமைப்புகளை சீர்குலைக்க முயன்றுள்ளார்.
#WATCH: Israeli passengers rush the cockpit to rescue their Flydubai flight after the copilot attempted to hijack it. pic.twitter.com/rs9L3EzL2B
— Israel National News - Arutz Sheva (@ArutzSheva_En) September 30, 2026
விமானம் பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், விமானம் செங்குத்தாக கீழ் நோக்கி கீழிறங்கியது.
உடனடியாக விமான பணியாளர்கள் அவசர கால எச்சரிக்கைகளை இஸ்ரேல் நாட்டுக்குக் கொடுத்தனர். பொது அவசர நிலையை அறிவிக்கும் ‘7700’ என்ற எச்சரிக்கையும், விமானம் வழக்கத்துக்கு மாறாக சுமார் 15,000 அடி உயரத்தில் தாழ்வாகப் பறந்த போது, ‘ஸ்குவாக் 7500’ என்ற விமான கடத்தல் எச்சரிக்கையும் விடப்பட்டது.
விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து சட்டென 10 ஆயிரம் அடிக்குக் கீழே இறங்கியது. இந்த மோதலின்போது விமானம் சுமார் 17,400 அடி உயரத்தை இரண்டு நிமிடங்களில் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை கடத்த முயற்சி
பின்னர் விமானப் பணியாளர் ஒருவரும் பயணி ஒருவரும் விமானி அறைக்குள் நுழைந்து சந்தேகநபரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென மீண்டும் அதிக உயரத்துக்குப் பறந்தது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் குழப்பம் அடைந்து அச்சத்தில் கத்தியுள்ளனர்.
இதற்கிடையில், தகவல் அறிந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்புத் துறை அமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்திய பின்னர் இஸ்ரேலிய வான்வெளி சிறிது நேரத்தில் மூடப்பட்டது.
விமானம் கடத்தப்பட்டதாக முதலில் தகவல்கள் பரவின. இதனால் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைக்க இஸ்ரேல் போர் விமானங்கள் களத்தில் இறக்கப்பட்டன. அதற்குள் பயணிகள் விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் சவுதி அரேபியா நோக்கி திரும்பியது.
Flightradar data showed that the Flydubai flight from Dubai to Tel Aviv descended 14,000 feet in just one minute. Authorities believe the co-pilot was trying to crash the plane in a terror attack and kill all passengers aboard.#Flydubai #FZ1073 #TelAviv #Dubai #Israel… pic.twitter.com/SruqOkPNeX
— xpos (@blame_d_cat) September 30, 2026
பின்னர் இந்த விமானம், சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
இதைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தைச் சூழ்ந்து கொண்டு பயணிகளை கவனமாக தரையிறக்கினர்.
இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த மிரியம் என்ற பயணிகூறும்போது, “விமானிகளின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. விமானத்தின் கதவை ஊழியர்கள் திறந்த போது, விமானிகளில் ஒருவர் ரத்த காயங்களுடன் தரையில் கிடந்ததை நான் பார்த்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் சவுதி - ஜோர்டான் வான் எல்லையில் பறந்த போது விமானத்தில் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமானியை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திவிட்டு விமானத்தின் துணை விமானி விமானத்தைக் கடத்தி தரையில் மோத முயற்சித்தது தெரிய வந்தது.
விமானிக்கு கத்திக்குத்து
ஆனால், விமானிகள் அறையில் அலறல் சத்தம் கேட்டவுடன், பயணிகள் சென்று உதவியுள்ளனர். துணை விமானியையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.
அதன் பிறகு விமானி ரத்த வெள்ளத்திலும் துணிச்சலாகப் போராடி விமானத்தைத் தனதுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
பல கட்ட சோதனைகள் இருந்தும் துணை விமானி கத்தியை எப்படி விமானத்துக்குள் கொண்டு சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால், சிறிய பேனா கத்தியை அவர் மறைத்து கொண்டு வந்து, அதன் மூலம்தான் விமானியை குத்தியுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடுவானில் இந்த சம்பவம் நடந்து காணாளி இணையத்தில் பரவியதால், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விமானத்திற்குள் சக விமானி ஒருவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் விமானத்தை சீர்குலைக்க முயன்ற சம்பவத்தைத் தடுத்து, பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய flydubai விமானத்தின் பிரதான விமானி இந்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த கெப்டன் மச்சார் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
My salute to the Indian pilot Captain Smit Machchhar for his extraordinary bravery.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) September 30, 2026
Despite being stabbed and seriously injured, he fought back, resisted, opened the cockpit door, and enabled passengers and crew to overpower the attacker — preventing a catastrophic mid-air…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கெப்டன் மச்சாரை “உண்மையான வீரர்” எனப் பாராட்டியதுடன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்.
இந்திய பிரஜையான கெப்டன் ஸ்மித் மச்சார், கடந்த நான்கு ஆண்டுகளாக flydubai நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் அவர் SpiceJet விமான நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.