புளோரிடா கட்டட விபத்து - அதிகரிக்கும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை
அமெரிக்காவின் புளோரிடா மாநில மியாமிக்கு அருகே 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை12 ஆக உயர்வடைந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 40 ஆண்டுகள் பழமையான 12 மாடி குடியிருப்பு கட்டடம் கடந்த வியாழக்கிழமை திடீரென இடிந்து வீழ்ந்தது.
இந்த கட்டடம் இடிந்த பகுதியில் ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேடல் மற்றும் மீட்பு முயற்சியின் படி இதுவரை 12 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தற்செயலான கட்டமைப்பு தோல்வி என மதிப்பிடக்கூடிய பேரழிவின் காரணமாக 149 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் என பொறியியலாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுக்கின்றது.