அம்பாறையில் 3000 ஏக்கர் வயல் நிலங்களை மூழ்கடித்த வெள்ளம்
அம்பாறை (Ampara) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 3,000 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (21) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
வடிந்தோடிய நீர்...
மேலும், நீர் வடிகால் அமைப்பில் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், வெள்ளத்தில் மூழ்கிய 3,000 ஏக்கர் நெற்பயிர்களில் சுமார் 1,000 ஏக்கர் வயல்கள் நீர் வடிந்தோடியதன் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், 1,000 ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற முடியுமென தான் நம்புவதாகவும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |