வெள்ளத்தில் மூழ்கிய கந்தளாய் தாழ் நிலப்பகுதிகள்
தற்போதுள்ள காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழை காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பிரதேசத்தின் பல தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கந்தளாய் பேராறு மூன்றாம் கொலனி, இரண்டாம் கொலனி மற்றும் மதுரசாநகர் போன்ற தாழ் நிலப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் சுமார் 250 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தாழ் நிலப்பகுதிகள் முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. வடிகால்கள் நிரம்பி வழிவதால், பல பகுதிகளில் வீதிகளிலும் தாழ் நிலப்பகுதிகளிலும் மழை நீர் நிரம்பியுள்ளது.

போக்குவரத்து தடை
இதன் காரணமாக, ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கந்தளாய் கிராம சேவையாளர்கள் வீடு வீடாகச் சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது .