திருகோணமலையில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நில பிரதேசங்கள்! : மக்கள் பாதிப்பு (Photos)
திருகோணமலையில் தொடர்ச்சியாக பெய்த கன மழையின் காரணமாக திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் மட்கோ, பாலையூற்று, ஜமாலியா, லவ் லேன், செல்வநாயக புரம் மற்றும் பல்லத்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் உள்ள தாழ் நிலப்பிரதேசங்களே இவ்வாறு வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இது தொடர்பில் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாழ்நிலப் பிரதேசத்தை அண்டிய வீதிகள் சில புனரமைக்கப்படாமலும் மேலும் சில வீதிகள் புனரமைக்கப்பட்ட போதிலும் சரியான முறையில் வடிகான்கள் இல்லாமையினால் இவ்வாறு மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மழைநீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததில் சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் இருக்கும் வீடுகளில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வாறு வீதிகள் புனரமைக்கப்படும் போது உரிய முறையில் வடிகான்கள் அமைத்து மழைநீர் வடிந்து ஓடக்கூடிய ஏற்பாடுகளை செய்து தருமாறும், இவ்வாறு மழை நீர் வீடுகளுக்குள் போவதை தடுக்குமாறும் உரிய அதிகாரிகளிடம் பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
