இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை
இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த காலப்பகுதியில் வழமையான மழைவீழ்ச்சியை விட தீவிரமான மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்வரும் 6 மாத காலநிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
எல் நினோ நிலைமை
அத்துடன், எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் எல் நினோ நிலைமை கடுமையாக பாதிக்கக்கூடும்.

இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் சில பிரதேசங்களுக்கு 75 மில்லிமீட்டர் அளவிலான மழை எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர, ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களிலும் வெப்பமாக காலநிலை தொடரும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.