நீண்ட வார இறுதி விடுமுறை! அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிகக்ப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி,, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களிலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடத்தில் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு இடம் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளுக்கு அருகிலும் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுகின்றது.
குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும் கவனமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று தொடங்கும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10