சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல்! புலனாய்வு அதிகாரிகளின் கையில் முடிவு..
சுரேஷ் சலேவின் இதற்கு முன்னரான 90 நாட்கள் தடுப்புக் காலத்தில் அவர் சரியான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கணிசமான தகவல்களை கண்டறிந்திருக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாளன் பிரதானி சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் உத்தரவு விசாரணைகளின் அதிகாரிகளின் தேவைக்கேற்பவே எடுக்கப்படும்.
தடுப்புக் காவல்
சுரேஷ் சலேவின் இதற்கு முன்னரான 90 நாட்கள் தடுப்புக் காவலில் சுமார் 82 நாட்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என நினைக்கின்றேன்.
இதன் காரணமாக, புலனாய்வு அதிகாரிகளால் அவரிடம் தேவையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாமல் போனது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனவே விசாரணைகள் மேலும் தொடர வேண்டுமா, இல்லையா, எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.
இது முற்றிலும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விடயம். எனவே புலனாய்வாளர்களின் தகவல்களின் அடிப்படையிலேயே தடுப்புக் காவல் காலம் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10