தேசியக் கொடியில் மாற்றம் செய்ய வேண்டுமென அமைச்சர் கூறினாரா!
தேசியக் கொடியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தான் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த பிரசாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கொடி மாற்றம் குறித்துப் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் தொடர்பான இணையதள இணைப்புகள் ஊடகவியலாளர்களிடம் இருந்தால், அவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டிகளை இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் யோசனை குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியவர்கள் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குப் பிந்திய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் யோசனைகள் கிடைத்துள்ளதாகவும், எனினும் இது குறித்த இறுதித் தீர்மானத்தை அரசாங்கமே எடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10