இலங்கையின் முக்கிய ஆறுகளின் நீா்மட்டமும் வெள்ளநிலையும்
இலங்கையின் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் மகா ஓயா ஆற்றின் நீா் பெருக்கெடுப்பதன் காரணமாக படல்கம பகுதியில் வெள்ளநிலை ஏற்பட்டுள்ளதாக அனா்த்த முகாமை மத்திய நிலையம் தொிவித்துள்ளது.
எனினும் கிாியுல்ல பகுதியில் சிறு வெள்ளநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மல்வத்து ஓயா ஆற்றின் நீர் பெருக்கெடுத்துள்ளமையால், தந்திரிமலே பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
களனி கங்கையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. எனினும் ஹென்வல பகுதியில் எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களு கங்கையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.எனினும் புட்டுபௌஹவுல மற்றும் மாகுர பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மில்லகந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஜின் கங்கையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. எனினும் பத்தேக பகுதியில் சிறு வெள்ளநிலை ஏற்பட்டுள்ளது.
நில்வள கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனினும் தல்கஹாகொட பகுதியில் சிறு வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனினும் துனமலே பகுதியில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
