தென்னிலங்கையில் வெள்ள நிலைமை - கோவிட்டால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நெருக்கடியில்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்ட பிரதேச செயலகத்தில் வெள்ளம் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
விசேடமாக கிங் கங்கைக்கு அருகில் வசிக்கும் மக்கள் தீவிர அவதானமாக இருக்க வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் முக்கிய பல பகுதிகளில் தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. அனர்த்த நிலைமை தொடர்பில் காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அனர்த்த நிலைமை தொடர்பில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் முப்படையினரின் ஆதரவுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல சுகாதார பிரிவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


