யாழிற்கு ஒதுக்கப்பட்ட வெள்ள ஒதுக்கீட்டு நிதி : அரசாங்க அதிபர் அளித்துள்ள விளக்கம்
வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 25000 ரூபா கொடுப்பனவு முறைகளில் முறைகேடுகளோ குளறுபடிகளோ ஊழல் சார்ந்த செயற்பாடுகளோ இடம்பெறவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை (05.12.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலதிகமாக நிதி ஒதுக்கீடு இருந்தால்
நாடு முழுவதிலும் அண்மைய காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டித்வா புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14ஆயிரத்து 624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்திற்கு 365.6 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அனர்த்த சேவைகள் நிவாரண நிலையத்தின் கடிதத்தின் பிரகாரம், முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதியில் சேதமடைந்த வீடுகள், வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படா விட்டாலும் வெள்ளத்தால் சிறிய அளவு பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்த கொடுப்பனவுக்கான தகுதிக்குள் உள்ளடக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தவகையிலேயே இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், சரியான முறையில் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட பின்னர் மேலதிகமாக நிதி ஒதுக்கீடு எங்களிடம் இருக்குமாக இருந்தால் அந்த நிதியானது அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு எம்மால் அனுப்பி வைக்கப்படும்.
ஆகவே உத்தியோகப் பற்றற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்கின்றபோது கடமை உணர்வுடன் அர்ப்பணிப்பாக பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |