முல்லைத்தீவில் வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட கிராமம் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெளித்தொடர்புகள் எதுவுமின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் குறித்த கிராமம் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
67 குடும்பங்கள் பாதிப்பு
சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வசித்து வரும் நிலையில் குறித்த குடும்பங்கள் வெள்ளத்தினால் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி நிர்க்கதியாக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில் , 7,8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும். பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்கு கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்
இதேவேளை, கால்நடைகள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்படுதாகவும் , சிலவற்றை இறந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர்
சிறு குழந்தைகளுடன் அவர்கள் வாழ்ந்து வரும் நிலையில் வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழலில் தாம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வீடுகளும் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த 16ஆம் திகதி வரை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 283 குடும்பங்களை சேர்ந்த 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்திருக்கின்றது.
அத்துடன் மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1225 குடும்பங்களை சேர்ந்த 3757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 63 குடும்பங்களை சேர்ந்த 201 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குதொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 2 குடும்பத்தை சேர்ந்த 10 பேருமாக 70 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள், இராணுவத்தினர், கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர் .
இந் நிலையில் இன்று (18.12.2023) அதிகாலை தொடக்கம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் 111 குடும்பங்களை சேர்ந்த 355 பேர் மன்னகண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.





உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
