வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!
மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 23000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய அழிவுகள்
அதிகளவான பகுதிகளில் நெல் விதைக்கப்பட்ட சில தினங்களில் இவ்வாறு மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அநேக பகுதிகளில் குளக்கட்டுக்கள் உடைந்த காரணத்தினால் இவ்வாறு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கினாலும், அடுத்த போகத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அநேக பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி