வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கையின் பகுதிகள் - மாணவர்கள் உட்பட மக்கள் பாதிப்பு
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களின் வீதிகள் நீரில் மூழ்கியமையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, வெள்ள நீர் மட்டம் வேகமாக உயர்ந்து காணப்பட்டதாக நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை மையங்களுக்குச் செல்ல உதவுவதற்காக படகு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேவையான நடவடிக்கைகள்
அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நன்மை கருதி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும் பயணம் செய்வதில் சிரமப்படும் மாணவர்கள் இருந்தால், கிராம அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாக நாகொடையின் போவிடியமுல்ல பகுதியில் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பின் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் காலியின் மாபலகம பகுதியின் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் இணைந்து போக்குவரத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri