பாகிஸ்தானை உலுக்கிய அனர்த்தம்.. 2 மில்லியன் மக்கள் பாதிப்பு
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் அதன் வரலாற்றிலேயே மிகப்பாரிய வெள்ளம் பதிவாகியுள்ளது.
சட்லெஜ், செனாப் மற்றும் ராவி நதிகளில் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்ததால் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளம் பஞ்சாப் மாகாணம் இதுவரை கண்டிராத அளவிற்கு பாரியதாகும். மூன்று நதிகளும் ஒரே நேரத்தில் அதிக நீருடன் பெருக்கெடுத்து ஓடுவது இதுவே முதல்முறை என கூறப்படுகின்றது.
breadbasket
மக்கள் பாதுகாப்பிற்காக பள்ளிகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பாக வெளியற்றப்பட்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாகாணம் பாகிஸ்தானின் breadbasket என அழைக்கப்படும் முக்கிய விவசாய மாகாணமாக இருப்பதால், இந்த வெள்ளம் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமையை பெரிதும் பாதிக்கக்கூடும்.
இது பாகிஸ்தானின் சுற்றுசூழல் மற்றும் சமூக நலனுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
