மட்டக்களப்பில் வெள்ள நீரால் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (16) காலை தொடக்கம் மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக வாழைச்சேனை, கிரான், செங்கலடி, வெல்லாவெளி, போன்ற தாழ்நிலைப் பகுதிகளில் மழைநீர் காணப்பட்ட போதிலும் இன்று பெய்த மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கிரான், வாகரை, செங்கலடி, போன்ற பகுதிகளில் மக்கள் போக்குவரத்து செய்யும் பிரதான பாதைகள் ஊடாக வெள்ள நீர் தேங்கி காணப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பாதிப்பு
இப்பகுதியில் இராணுவத்தினரின் உதவியுடன் பிரதேச செயலகத்தினால் படகுச் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல ஏக்கர் காணிகளில் தற்போது சிறு போக வேளாண்மை செய்கை ஆரம்பக்கட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இப்பகுதியில் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள், நோயாளிகள் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படுவாங்கரைப் பகுதியில் சிறு போக வேளாண்மை செய்கைக்கு தயாராகி இருந்த நெற்காணிகளும் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் விவசாயிகள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.
You may like this ..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam