கொட்டி தீர்க்கும் மழை! மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மார்கழி (2021) மாதத்தில் சற்று ஓய்ந்திருந்த போதிலும், தை முதலாம் திகதியிலிருந்து மீண்டும் மழை பொழியத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை (03) காலை 8.30 மணிவரையில் கடந்த 24மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பில் 54.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப்பகுதியில், 66.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 27.2மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 70.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான்பகுதியில் 88.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
உன்னிச்சைப் பகுதியில் 25.0மில்லி மீற்றர்
மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 23.7மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,
வாகனேரிப் பகுதியில் 91.9மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப்
பகுதியில் 30.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
எனினும் மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ளதுடன் பெரிய குளங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பெறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
31அடி கொள்ளளவுடைய நவகிரிக் குளத்தின் நீர் மட்டம் தற்போது 26அடி 4 அங்குலமாகவும், 17அடி 25அங்குலம் கொள்ளளவுடைய தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 15அடி 2அங்குலமாகவும் ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேபோன்று 33அடி 0அங்குலம் கொள்ளளவுடைய உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 28அடி 3அங்குலமாகவும், 15அடி 8அங்குலம் கொள்ளளவுடைய உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் தற்போது 13அடி 7அங்குலமாகவும், 19அடி 2அங்குலம் கொள்ளளவுடைய வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 16அடி 8அங்குலமாகவும், 11அடி 6அங்குலம் கொள்ளளவுடைய கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 11அடி 8அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
மேலும், 12அடி 0 அங்குலம் கொள்ளளவுடைய கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் தற்போது 6அடி 10 அங்குலமாகவும், 15அடி 5அங்குலம் கொள்ளளவுடைய வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் தற்போது 14அடி 0அங்குலமாகவும், 12அடி 6 அங்குலம் கொள்ளளவுடைய வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 11அடி 0அங்குலமாகவும், புணாணை அணைக்கட்டின் நீர்மட்டம் தற்போது 7அடி 7அங்குலமாகவும்; உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
பல உள்ளுர் வீதிகளிலும், வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் மக்கள் உள்ளுர் போக்குவரத்துக்களிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கடும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களிலும் இன்று 2022 ஆம் ஆண்டுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : ருசாத், குமார்









காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
