வடக்கு - கிழக்கு மழைவீழ்ச்சி தொடர்பில் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வெளியிட்ட தகவல்

Jaffna India Climate Change Weather Floods In Sri Lanka
By Kajinthan Dec 18, 2023 12:16 PM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து அரபிக்கடலை சென்றடைகின்றமையாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இந்த சுழற்சி காற்றானது நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையிலிருந்து முழுமையாக விடுபட்டு அரபிக் கடலுக்கு சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாளை இரவு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் படிப்படியாக மழை வீழ்ச்சி குறைவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது என சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது


வெள்ள அனர்த்தங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், கிடைத்து வருகின்ற கனமழை காரணமாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பரப்பு நீர் நிலைகள் அவற்றினுடைய உவர்நீரை பல்வேற்றுவதன் காரணமாகவும் பல்வேறு பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

வடக்கு - கிழக்கு மழைவீழ்ச்சி தொடர்பில் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வெளியிட்ட தகவல் | Flood And Heavy Rain In North And East

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளும், கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியும், வவுனியா மாவட்டத்தினுடைய வடக்கு பகுதியும் , மன்னர் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி போன்ற பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கிடைக்கின்ற கனமழை மற்றும் மேலதிக மேற்பரப்பு நீர் காரணமாகவும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற 54 நடுத்தர மற்றும் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் அவற்றினுடைய உவர் நீரை வெளியேற்றுவதற்றுவதன் காரணமாகவும், தொடர்ச்சியாக 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பல பிரதேசங்களில் பதிவாகி இருப்பதன் காரணமாகவும் வடக்கு மாகாணத்தினுடைய பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தினுடைய தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், ஆற்றங்கரை ஓரம், குளங்கள் மற்றும் வான் பாய்கின்ற பகுதிகளுக்கு அண்மித்திருக்கின்ற மக்கள் முன்னேற்பாடாக முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக, ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன.

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மீண்டும் ஒரு காற்று சுழற்சி

அதேசமயம் வடக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைத்து வருகின்ற மழையானது நாளை பிற்பகுதியுடன் படிப்படியாக குறைவடைந்து மீண்டும் 23 ஆம் திகதியளவில் மழை வீழ்ச்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. வங்காள விரிகுடாவில், குறிப்பாக இலங்கைக்கு கிழக்காக எதிர்வரும் 19, 20, 22 ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகுவதன் காரணமாக இலங்கையினுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீளவும் ஒரு கனமழையை எதிர்நோக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வடக்கு - கிழக்கு மழைவீழ்ச்சி தொடர்பில் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வெளியிட்ட தகவல் | Flood And Heavy Rain In North And East

அத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதியும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதியும் மீளவும் காட்டு சுழற்சிகள் தோன்றுவதற்கான வெப்பநிலை சாதகங்கள் வங்காள விரிகுடாவில் காணப்படுவதன் காரணமாக வடக்கு மாகாணம் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை தொடர்ச்சியாக கன மழையை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே வடக்கு மாகாணங்களில் உள்ள குளங்கள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உவர்நீரை தற்சமயம் வெளியேற்றி வருகின்றது. இந்த நிகழ்வு அடுத்த கிழமை வரைக்கும் தொடரும் என்பதனால் 23 முதல் கிடைக்கின்ற கனமழையும், தொடர்ச்சியாக இந்த பிரதேசங்களில் வெள்ள அனர்த்ததை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.

எனவே மக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டிய மேற்கொள்வதன் ஊடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை இயலுமான அளவில் குறைக்க முடியும் என கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US