தொடரும் சீரற்ற காலநிலை! விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் 'அம்பர்' வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையின் பிரகாரம், மல்வத்து ஓயா பள்ளத்தாக்கின் வெங்கலச்செட்டிக்குளம், மடு, முஸ்ஸாலை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகும்.
கோரிக்கை
இதனால், மல்வத்து ஓயாவின் சமவெளி ஊடாக செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அப்பிரதேசங்களில் வசிப்பவர்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
