விமான சேவைகள் நிறுத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு
சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான விமான சேவைகள் நாளை மறுதினம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த நகரத்திற்கு மேற்கொள்ளப்படும் விமான போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிப் புறப்படவிருந்த UL265 விமானச் சேவையும், நாளை ரியாத்திலிருந்து கொழும்பு நோக்கி வரவிருந்த UL266 விமானச் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு
இது தொடர்பாக மாற்றுப் பாதை அல்லது மாற்று இடமொன்று பயன்படுத்தப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மொரோக்கோ மற்றும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
அத்துடன் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சூடான் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri