கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள்: சற்றுமுன் விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு புறப்பட திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (01.03.2026) மாலை 5 மணி வரை இந்த விமான பயணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பயணிகளின் பாதுகாப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான இராணுவ அமைதியின்மை மற்றும் ஈரான் உட்பட பல நாடுகளில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan