வெளிநாடொன்றில் கத்தரிக்கோல் தெலைந்ததால் இரத்து செய்யப்பட்ட விமான பயணங்கள்
ஜப்பானின் (Japan) விமான நிலையம் ஒன்றில் கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போயுள்ளது.
இதன் காரணமாக, 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன.
சோதனை நடவடிக்கை
விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளுக்காக சனிக்கிழமை காலை சுமார் இரண்டு மணி நேரங்கள் ஆகியுள்ளதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், விமான நிலைய ஓய்வறையில் இருந்த பயணிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் பெரும் நெரிசல் மற்றும் வரிசைகள் காணப்பட்டன.
மேலும், மறுநாள் (18) கடையில் ஒரு தொழிலாளியால் கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாக கொக்கைடோ விமான நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, காணாமல் போன கத்தரிக்கோலும் கிடைத்ததும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தும் வரை அறிவிப்பை வெளியிடுவதை நிறுத்தி வைத்திருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 46 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
