இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

SriLankan Airlines Sri Lanka Dubai
By Jenitha Apr 08, 2023 02:54 PM GMT
Report

துபாய் நோக்கி புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமை காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த விமானம் இன்று (8.4.2023) காலை தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! | Flight Service To Dubai Srilankan Airlines

தொழில்நுட்பக் கோளாறு

சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டுள்ளது. 

இந்த விமானம் நேற்று (07) மாலை 06.25 மணிக்கு டுபாய் நோக்கிப் புறப்படவிருந்த நிலையில் 15 மணித்தியாலங்கள் தாமதத்திற்குப் பின்னர் இன்று (08) காலை 09.30 மணிக்குப் புறப்பட்டது.

எனினும் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களுக்குப் பின்னர் 10.40 மணியளவில் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானிக்கு முன்பாகவுள்ள கண்ணாடியில் ( windshield ) விரிசல் ஏற்பட்டமையால் விமானம் தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! | Flight Service To Dubai Srilankan Airlines

மாற்று விமானத்தில் டுபாய்க்கு புறப்படும் பயணிகள் 

இதன்போது விமானத்தில் 189 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர். 

இந்த விமானத்தின் பயணிகள் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாற்று விமானத்தில் டுபாய்க்கு புறப்பட உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

சீரற்ற காலநிலை 

மேலும், கடும் மழையுடனான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் மற்றும் விமான நிலையத்துக்கு உள்வரும் சில விமானங்களின் பயணங்கள் தாமதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை 4.45 மணிக்கு, டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த UL226 என்ற விமானம், இன்று மாலை 4.55 மணிக்கு நாட்டை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! | Flight Service To Dubai Srilankan Airlines

அத்துடன், நேற்றிரவு 7 மணிக்கு, ஜப்பான் நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்று, இன்று அதிகாலை 1.50 மணிக்குப் புறப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11.40 மணிக்கு மும்பை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்று, இன்று அதிகாலை 5.35 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதேநேரம், சீனாவில் இருந்து வந்த எம்.எல். 231 என்ற விமானம் மாலைதீவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், குவைத்தில் இருந்து வந்த யு.எல். 230 என்ற விமானம் மத்தள விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களில், இன்று கடும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக செய்தி: ராகேஷ்



மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US