பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (08.04.2023) காலை இடம்பெற்றுள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட விமானம்
குவைட்டில் இருந்து வந்த நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை பெய்த கனமழை பார்வைத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், சில விமானங்களின் பயணங்களும் தாமதமாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட விமானம்

குவைட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 230D விமானம் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் விமானம் காலை 6.10 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam