கடும் நெருக்கடியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்: குத்தகை அடிப்படையில் விமான கொள்வனவு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செயற்பாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு மேலும் 10 விமானங்கள் தேவைப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (Srilankan Airlines) நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, நான்கு ஏ-330 விமானங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், மாதாந்தம் 360,000 அமெரிக்க டொலர்களை செலுத்துவதாக உறுதியளித்து அந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டெண்டர் மற்றும் பிற கொள்முதல் நடவடிக்கை
எவ்வாறாயினும், டெண்டர் நடைமுறை மற்றும் பிற கொள்முதல் நடவடிக்கைகளுக்கு சுமார் 1 1/2 வருடங்கள் எடுக்கும் என்பதால், இந்த 4 விமானங்களில் 2 விமானங்கள் வேறொரு நாட்டின் விமான நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் விமான சேவையை மறுசீரமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இந்த விமான நடவடிக்கைகளை பராமரிக்க இந்த விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது உலகில் விமானங்களுக்கு பற்றாக்குறை உள்ளதுடன், விமானங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக தேவை உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
எனவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 4 விமானங்கள் குத்தகைக்கு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |