டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து
அயோத்தியில் இருந்து டெல்லிக்கு பயணித்த இண்டிகோ (IndiGo) விமானம், சண்டிக்கார் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது, இரண்டு நிமிடங்களுக்கு மாத்திரமே அதன் பறப்புக்கான எரிபொருள் எஞ்சியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அயோத்தியில் இருந்து இந்த விமானம் பிற்பகல் 03.25க்கு டெல்லிக்கு பயணத்தை மேற்கொண்டது. இதன்படி மாலை 04.30க்கு டெல்லியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு மீறல்
இருப்பினும், தரையிறங்குவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதால், விமானத்தை தரையிறக்குவதற்கு முடியாமல் உள்ளதாக விமானி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் விமானம் நகரின் மீது வட்டமிட்டு இரண்டு முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. ஆனால் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.
பின்னர், மாலை 06:10 மணிக்கு சண்டிகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியுள்ளதுடன் 01 அல்லது 02 நிமிடங்களுக்கே விமானத்தில் பறப்புக்கான எரிபொருள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோசமான வானிலையிலும் தரையிறங்க முயற்சித்தமை மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாகும் என்று விமானியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |