பொலிஸ் அதிகாரி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்
அனுராதபுரத்தில் பொலிஸ் அதிகாரியின் நேர்மையான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 18ஆம் திகதி விகாரைக்கு அருகில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணப்பை ஒன்று மறந்து விட்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பையை அதன் உரிமையாளர் தேடி பாதுகாப்பாக ஒப்படைக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பணப்பையின் உரிமையாளரை தேடி அவரிடம் அதனை பாதுகாப்பாக ஒப்படைக்க குறித்த பொலிஸ் அதிகாரி செயற்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த எஸ்.எம்.ஆனந்த சிறிபால என்ற பொலிஸ் அதிகாரியே இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை பாராட்டி அவருக்கு பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri