தப்பி ஓடிய தொற்றாளர்கள் - ஒரே கிராமத்தினைச் சேர்ந்த 32 பேருக்கு தொற்று
வவுனியா - தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தினை சேர்ந்த 3 பேர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்றனர்.
அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் தங்காமல் தப்பிச்சென்றிருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடத்தி ஏழு நபர்களைத் தனிமைப்படுத்தியிருந்தனர்.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதனைக் கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்.
இது தொடர்பாகச் சுகாதார பிரிவிற்குத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியைச் சேர்ந்த 150 பேரிடம் நேற்றையதினம் அன்டிஜன் பரிசோதனையினை முன்னெடுத்துள்ளனர்.
அதில் 32 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் அனேக மக்கள் நாடோடிகள் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.










அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
